Connect with us

பிரபல இயக்குனர் மணிரத்னம் சென்னை அப்பல்லோவில் அனுமதி

பொழுதுபோக்கு

பிரபல இயக்குனர் மணிரத்னம் சென்னை அப்பல்லோவில் அனுமதி

மெளன ராகம், அஞ்சலி, தளபதி, நாயகன், உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மணிரத்னம் சற்றுமுன் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சற்றுமுன் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது

62 வயதாகும் மணிரத்னம் அவர்களுக்கு ஏற்கனவே இருமுறை நெஞ்சுவலி வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் இயக்கி முடித்துள்ள ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியில் இருந்த நிலையில் திடீரென நெஞ்சு வலி வந்துள்ளது.

தற்போது மணிரத்னம் அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை இன்னும் சற்று நேரத்தில் அப்பல்லோ நிர்வாகம் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top