Connect with us

ஹவுஸ்மேட்ஸ்க்கு பாடம் நடத்திய தலைமை ஆசிரியர் சேரன்!!

பொழுதுபோக்கு

ஹவுஸ்மேட்ஸ்க்கு பாடம் நடத்திய தலைமை ஆசிரியர் சேரன்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி 3 வேறு லெவலாகப் போய்க் கொண்டிருக்கிறது, கவின்- லாஸ்லியா காதல், சேரன்- லாஸ்லியா உறவில் விரிசல், சாண்டியின் மழலை கெட்டப், கஸ்தூரி- வனிதாவின் சண்டை, சேரனின் தனிமை என மசாலாவாக சென்று கொண்டிருக்கிறது.

இனி டிஆர்பியை ஏத்த எதுவும் தயாரிப்புக் குழு செய்யத் தேவையில்லை, அவரவர் பங்குக்கு அவர்களே போதும் போதும் என்கிற அளவு செய்கின்றனர்.

நேற்று முன்தினம் நடந்த கிண்டர் கார்டன் டாஸ்க்கின் தொடர்ச்சியாக நேற்றும் டாஸ்க் தொடர்ந்தது. மீண்டும் பள்ளிச் சீருடைகளை அணிந்தபடி அனைவரும் குழந்தைகள்போல பாவிக்கத் தொடங்கினர்.

கஸ்தூரியைத் தொடர்ந்து நேற்று மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் பாடம் எடுத்தார் சேரன். ஔவையார் எழுதிய ஆத்திச்சூடி பற்றிப் பாடிக் காட்டி விளக்கம் கொடுத்தார். அப்போது மாணவர்கள் அதனை நகைச்சுவையாக்கினர். சேரன் தனக்கான பாத்திரத்தை செய்ய ஒரு வாய்ப்பாக இது அமைந்தது.

 அதைத் தொடர்ந்து அனைவருக்கும் வாக்கியம் கொடுத்து அதை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கச் சொன்னார் சேரன். அதில் லோஸ்லியா, ஷெரின், வனிதா, கவின், தர்ஷன், முகின் ஆகியோர் சிறப்பாக ஒப்புவித்து பாராட்டுகளைப் பெற்றனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top