Connect with us

திண்டுக்கல் லியோனிக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு அளித்த பிரபல இயக்குனர்

பொழுதுபோக்கு

திண்டுக்கல் லியோனிக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு அளித்த பிரபல இயக்குனர்

பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி நடித்த ஒரே படம் கங்கா கெளரி’ என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் பட்டிமன்றத்தில் பிசியாகிவிட்டதால் மீண்டும் சினிமாவில் நடிக்கவில்லை

இந்த நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமியின் அடுத்த படத்தில் லியோனி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் வடிவேல் ஹீரோவாக நடிக்கவுள்ள ஒரு படத்திலும் அவருக்கு அப்பாவாக லியோனி நடிக்கவுள்ளாராம்.

இதுகுறித்து லியோனி ஒரு விழாவில் கூறியபோது, ‘வடிவேலு என்னிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அதில் வடிவேலு, ரோபோ சங்கர், சூரி ஆகியோர் அண்ணன் தம்பிகள். இவர்களுக்கு நான் அப்பாவாக நடிக்க வேண்டும் என்று கூறினார். மீண்டும் என்னுடன் நடிக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதுபோல், இயக்குனர் சீனு ராமசாமியும், அவர் இயக்கும் அடுத்த படத்தில் என்னை நடிக்க வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்’ என்று கூறியுள்ளார்.

Continue Reading
To Top