Connect with us

தொடர்ந்து கலையும் அமமுக கூடாரம்

செய்திகள்

தொடர்ந்து கலையும் அமமுக கூடாரம்

ஜெ மறைவுக்கு பின் துணை முதல்வர் பன்னீர் செல்வம் அம்மா சமாதியில் இருந்த ஒரு தவத்தால் மிகப்பெரும் பிரிவினைகள் ஏற்பட்டது. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் அதிமுக பிரிந்தது. பின்பு சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் கிடைத்த தண்டனைக்காக சிறை செல்ல நேரிட்டது. அதற்குபின் சசிகலா அணியை தினகரன் வழிநடத்தினார் அதில் இருந்த பாதி எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைத்திருந்தார். அதில் ஒரு எம்.எல்.ஏ வான எடப்பாடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதல்வரான எடப்பாடி தினகரன் நிர்வாகம் நடத்தும் போக்கு பிடிக்காததால் தனது அணியை பன்னீர்செல்வத்துடன் இணைத்து அதிமுக கட்சியை வழி நடத்தி வருகிறார்.

தினகரன் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து ஆர்.கே நகரில் மட்டும் ஜெயித்தார்.

இருந்தாலும் தினகரனுக்கு தோள் கொடுக்கும் தோழர்கள் போல், செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி,வெற்றிவேல், புகழேந்தி இருந்து வந்தனர்.

இதில் யாரும் எதிர்பாராத வகையில் செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையை எதிர்த்து திமுகவில் இணைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமமுக எம்.எல்.ஏக்கள் யாரும் விலைபோகாமல் இருக்க தனக்கு சொந்தமான இசக்கி ரிசார்ட்ஸில் அறை வழங்கி வசதிகள் செய்து கொடுத்தவர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து வரும் இவரும் அதிமுகவில் இணைய முடிவு செய்து விட்டார்.

அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி இவரும் அதிமுகவில் இணைந்து விட்டார். எனினும் இதனால் பாதிப்பு ஒன்றும் இல்லை என தினகரன் தொடர்ந்து கூறி வருகிறார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top