மீண்டும் டிஜிட்டலில் வர இருக்கும் தங்க மகன்

ரஜினிகாந்த் நடிப்பில் தங்கமகன் திரைப்படம் கடந்த 1984ம் ஆண்டு வெளிவந்தது. பூர்ணிமா,வி.கே ராமசாமி, தேங்காய் சீனிவாசன் முதலானோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

மறைந்த இயக்குனர் ஏ. ஜெகநாதன் இயக்கி இருந்தார். இவர் ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம், கமல் நடித்த காதல் பரிசு படத்தையும் இயக்கியவர் ஆவார்.

இளையராஜா இசையமைப்பில் இப்படத்தில் தேன் சொட்டும் பாடல்கள் இடம்பெற்றிருந்தது. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ என்ற இனிய பாடல் புகழ்பெற்ற இப்படத்தின் பாடலாகும்.

டான்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தில் பல பாடல்கள் இடம்பெற்று இருந்தன. வா வா பக்கம் வா, பூமாலை ஒரு பாவை ஆகுமா போன்ற இனிய பாடல்களும் இப்படத்தின் வெற்றிக்கு துணை நின்றன.

தற்போது டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்யப்பட்டு இந்தப்படம் விரைவில் திரைக்குவர இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. சத்யா மூவிஸ் இப்படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது