பிரியங்காவின் கொடூர மேக்கப்

பிரபஞ்ச அழகி என்று 2000ம் ஆண்டு பெயர் வாங்கிய பிரியங்கா சோப்ராவா இது என பலரையும் மிரட்டியுள்ளார் பிரியங்கா. அமெரிக்க பாப் இசைப்பாடகர் நிக் ஜோனஸை காதலித்து மணந்த இவர் அமெரிக்காவில் வசிக்கிறார்.

அவ்வப்போது இந்தியாவும் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று செல்கிறார். அவருக்கும் நிக் ஜோனசுக்கும் மனக்கசப்பு என்று சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது இதை முற்றிலும் மறுத்த பிரியங்கா அப்படி எல்லாம் இல்லை என அவரது குடும்பத்தினர் அனைவருடனும் புகைப்படம் எடுத்து பகிர்ந்தார்.

இந்நிலையில் இருவரும் இணைந்து சில புகைப்படங்களை டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

வித்தியாசமான மேக்கப்புடன் காணப்படும் பிரியங்காவை ஒரு உடனே கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது.

https://twitter.com/priyankachopra/status/1125631297605423105