தோசை பொன்முறுவலா வர இதை சேருங்க! – சமையல் குறிப்புகள்

aa4d687f0a372b754d724edcd4b53000

கறிவேப்பிலையை சுத்தம் செய்து ஈரம்ப்போகும்வரை காயவிட்டு, பின்பு ஒரு அலுமினியப் பாத்திரத்தில்   போட்டு மூடிவைத்தாலோ அல்லது அல்லது அலுமிய பாயில் பேப்பரில் சுற்றி வைத்தாலோ காயாமல் இருக்கும்.

இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும். 

 தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு கலந்து தோசை சுட்டால் மொறு மொறுப்பாகவும் பொன்முறுவலாகவும் வரும்.

கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எறிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும். அத்தோடு இட்லிப்பொடி, சாம்பார் பொடி அரைக்கும்போது காய்ந்த கறிவேப்பிலையை சேர்த்தால் நல்ல வாசனையுடன் இருக்கும்.

204a511e454db66659111f2232de0dd5-1

வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். உப்பு சுவை கிழங்கில் இறங்கி ருசியாகவும் இருக்கும்.

வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் புதுசுப்போஒல எப்பவும் மிருதுவாக இருக்கும்.

சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது

பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும். மஞ்சள் தூளை ப.மிளகாயில் சிறிதளவு தடவி வைத்தாலும் ப.மிளகாய் சீக்கிரத்தில் கெட்டு போகாது. 

கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது.

சமையல் குறிப்புகள் தொடரும்… 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews