Connect with us

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் தோனி

விளையாட்டு

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் தோனி

லண்டன்:

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிகவும் மோசமாக சொதப்பினார்கள். முக்கியமாக இந்திய வீரர் தோனி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பலமான அணிகளை துவம்சம் செய்த இந்திய அணி,  மிகச் சிறிய ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர் வெற்றிகளின் அலட்சியமாய் அந்த ஆட்டம் இருந்தது. அடித்துப் பிடித்து 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோனி ஓய்வு பெறவேண்டும்:

 இந்த ஆட்ட த்தினால் தோனி மிக மோசமான விமர் சனங்களுக்கு ஆளானார். தோனி மிகப் பொறுமையாக பந்துகளைக் கையாண்டார், அவரால் ஸ்பின் பவுலிங்கினை எதிர்கொள்ள முடியவில்லை. அவர் உடனே ஓய்வு பெற வேண்டும் என்று பல ரசிகர்கள் விமர் சனம் செய்தனர்.

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் தோனி..

வெறியோடு பயிற்சி செய்த தோனி:

தோனி நேற்று நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்து வந்தார், அதிலும் சில ஷாட்களை அவர் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்துள்ளார், அந்த வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகி உள்ள து.

உலகக் கோப்பை தொடரில் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறார் தோனி.


கடைசி உலகக் கோப்பை:

 தோனிக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டி என்பதால் எப்படியாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இதனால் இன்றைய போட்டியில் சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளார் தோனி. 

தோனியின் பயிற்சி குறித்து தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறுகையில், “தோனி எப்போதையும் விட கூடுதல் நேரம் பயிற்சி எடுத்து வருகிறார். நேற்று அவர் நீண்ட நேரம் பயிற்சி செய்ததுடன் புதுமையான முறைகளைக் கையாண்டார்” என்றார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top