ஹாசினி கொலை வழக்கு: தூக்கு தண்டனனயை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு

சென்னை போரூரை சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தஷ்வந்த் குற்றவாளி என சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பில் தஷ்வந்துக்கு 46 ஆண்டுகால சிறைதண்டனை மற்றும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தஷ்வந்து தூக்குத்தண்டனையை உறுதி செய்ய இன்று காவல்துறையினர் சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்தனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் இதுகுறித்து தஷ்வந்த் மற்றும் தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.