தர்பார் போஸ்டர் காப்பியா? பதிலடி கொடுத்தார் டிசைனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நேற்று முன் தினம் தொடங்கியது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்பட போஸ்டர் வெளியான அன்றே இந்த போஸ்டர் காப்பி என்று சொல்லப்பட்டது.

ஹாலிவுட் படமான கிங் குந்தர் படத்தின் காப்பி என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் இதன் வடிவமைப்பாளர் வின்சிராஜ், ‘வடிவமைப்பாளரான தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மூலம் அவர் தர்பார் போஸ்டரை வடிவமைத்ததை கூறியுள்ளார்.

மூன்று முகம்’ கண்ணாடி போட்ட ரஜினியுடன் சேர்த்து, அபாயம் லோகோ வடிவமைப்புடன் இணைந்து இப்போஸ்டரை வடிவமைத்திருக்கிறார் என்பது வின்சிராஜ் வெளியிட்ட புகைப்படம் உணர்த்துகிறது

‘அட்டகத்தி’, ‘மரகதநாணயம்’,’கனா’ உள்ளிட்ட பல படங்களுக்கு போஸ்டர் வடிவமைத்தவர் வின்சிராஜ். பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ படங்களுக்கு வின்சிராஜ் போஸ்டர் வடிவமைத்திருப்பது நினைவுகூரத்தக்கது.