தர்பார் பாம்பே பின்னணி படமா

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படம் தர்பார். தர்பார் என பெயர் அறிவிக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் படத்தின் பூஜையும் நேற்று போடப்பட்டது. இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் பாஸ்கரன் தயாரிக்கிறார்.

இருபத்து நாலு வருடம் முன்பு ரஜினி நடித்த மாஸ் ஹிட் படம் பாட்ஷா. இன்று வரை இப்படத்தை அடித்துக்கொள்ள எந்த ஒரு மாஸ் படமும் இல்லை. ஏன் ரஜினிகாந்தின் மற்ற படங்களே பாட்ஷவை அடித்து கொள்ள முடியாது.

ரஜினிகாந்த் பாட்ஷாவை போல் ஒரு மாஸ் வெற்றியை கொடுக்க வேண்டும் என நினைக்கிறார் போலும். அதனால் இந்த படமும் பாம்பே பின்னணியில் தயாராக இருக்கிறது. சமீபத்தில் வந்த காலா படமும் பாம்பே பேக்ரவுண்டில் வந்த படம்தான். அது எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

இருப்பினும் ரஜினியின் எவர் கிரீன் படமான பாட்ஷா படம் மாதிரி ஒரு மாஸ் ஹிட்டை கொடுத்து விட்டு திரையுலகில் இருந்து விலக வேண்டும். அதன் பிறகு அரசியலில் ஈடுபட வேண்டும் என ரஜினி நினைக்க வாய்ப்புள்ளது.

அதனால் முன்னணி இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸுடன் கரம் கோர்த்திருக்கிறார் ரஜினிகாந்த்.