Connect with us

தனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

ராசி பலன்

தனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

இந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. ராகு பகவான் கடகம் ராசியில் இருந்து பெயர்ச்சியாகி மிதுனம் ராசியில் சஞ்சரிக்க போகின்றார். கேது பகவான் மகரம் ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்களது ஜென்மத்தில் சஞ்சரிக்க போகின்றார். தனுசு ராசியினருக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி என்ன பலன்களை தர போகின்றது என்பதை விரிவாக காணலாம்.

Dhanusu ragu kethu peyarchi 2019

பொதுவான பலன்கள்:

இதுவரை எட்டாம் இடத்தில் இருக்கின்ற ராகுவால் உறவுகள் இடையே சிறு சிறு பிரச்சனைகள், தொழில், வியாபாரத்தில், செய்கின்ற வேலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத சூழ்நிலை சந்தித்து வந்தீர்கள். எடுக்கின்ற முயற்சிகளில் தடைகளை உருவாக்கியிருப்பார். இரண்டாம் இடத்தில்  இருக்கின்ற கேதுவால் காரிய தடைகளும், உடல் உபாதைகளையும் சந்தித்து வந்திருப்பீர்கள்.

ஏழாம் இடத்தில் இருக்கின்ற ராகுவால் திடீர் மாற்றங்களும், திருப்பங்களும் உண்டாகும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் அல்லது வெளிமாநிலம் செல்ல நேரிடும். தனவரவு உண்டு. திருமண முயற்சிகள் கைக்கூடும். மாமன், மைத்துனர் வகையால் ஆதாயம் உண்டாகும்.

ஜென்மத்தில் இருக்கின்ற கேது சனியோடு இணைந்து உங்கள் ராசியில் சஞ்சரிக்க போகின்றார். உங்கள் ராசிநாதன் குருவின் வீட்டில் அல்லவா  இரண்டு அசுப கிரகங்கள் இருக்கின்றார்கள். எனவே எவ்வித பாதிப்புகளும் உண்டாக போவதில்லை. இல்லத்தில் இருப்பவர்களுடன் புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். சனி பகவானால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் மீது இருந்த வீண் பழிகள் விலகும். இதுவரை நீங்கள் அனுபவித்த அவமானங்கள், துயரங்களில் இருந்து விடுபடுவீர்கள்.

ஜென்மத்தில் கேது பகவான் இருப்பதால் அவ்வப்பொழுது தாழ்வு மனப்பான்மை வரக்கூடும். தேவையற்ற விஷயங்களை பற்றி சிந்தித்து கொண்டு இருக்காதீர்கள்.

புதியதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு சிலர் பணம் முதலீடு இவ்வளவு போட்டால் பெரிய லாபம் எடுக்கலாம் என்றெல்லாம் தூண்டி விடுவார்கள். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.  இந்த ராகு கேது பெயர்ச்சி சுமாரான பலன்களை கொடுத்தாலும், குரு பெயர்ச்சிக்கு பிறகு நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

படித்து முடித்து சரியான வேலை அமையாமல் இருக்கின்றவர்களுக்கு நல்ல வேலை அமையக்கூடும். பணியிடத்தில் சுமாரான நிலை இருக்கக்கூடும். வேலைச்சுமை குறையும். உங்களின் முக்கியமான கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு தாமதம் ஏற்பட்டாலும் பிற்காலத்தில் நல்ல முடிவு தெரியக்கூடும். செய்கின்ற வேலையில் உங்களது செல்வாக்கு, அந்தஸ்து உயரும்.

வியாபாரம்/தொழில் பிரிவினர்கள்:

வியபாரத்தில், தொழிலில் மாற்றங்கள் செய்ய புதிய சிந்தனைகள் தோன்றக்கூடும். வியாபாரம், தொழில் விஷயமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கக்கூடும். சிலருக்கு தேவையற்ற அலைச்சல் இருக்கக்கூடும். தீயோர் சேர்க்கை உண்டாகும் என்பதால் எதிலும் நிதானமாகவும், பொறுமையாகவும், தீர விசாரித்து, யோசித்து செயல்படுங்கள்.

மாணவ – மாணவியர்கள்:

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். நவீன சாதனங்களின் மீது அதிகம் ஈடுபாடு உண்டாகக்கூடும். பெற்றோர்கள் அவர்களிடம் கனிவாக பேசி தங்களின் மேற்பார்வையில் வைத்து கொள்ளுங்கள்.

 குடும்பம்:

இல்லத்தில் இருப்பவர்களுடன் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். தடைபட்டுக் கொண்டு இருந்த திருமணம் நல்ல படியாக முடிவடையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை புலப்படும். தேவையற்ற பொருட்களை வாங்குவதை தவிர்த்திடுங்கள். அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பொருட்களின் மீது முதலீடு செய்யும் முன்பு இந்த பொருள் நமக்கு பயன்படுமா என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள். தாராளமான பணவரவு உண்டு.

உடல்நலம்:

அவ்வப்பொழுது சிறு சிறு உபாதைகள் தோன்றக்கூடும்.

வணங்க வேண்டிய தெய்வம்:

அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று பிள்ளையாரை மனதார வழிபட்டு  வாருங்கள். மேலும் சுபகாரியத் தடைகள் அகல வராகி அம்மனை வழிபட்டு  வாருங்கள்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top