Connect with us

நடுத்தெருவில் நின்னிருப்போம்- தனுஷ் உருக்கம்

பொழுதுபோக்கு

நடுத்தெருவில் நின்னிருப்போம்- தனுஷ் உருக்கம்

கடந்த 2001ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துள்ளுவதோ இளமை. தனுஷ் இந்த படத்தில் நன்றாக நடித்திருந்தாலும் ஓரளவுதான் வரவேற்பு பெற்றார். படத்தை தனுஷ் அப்பா இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கி இருந்தார்.

படம் சிறந்த வரவேற்பை பெற்றது இதற்கு அடுத்தாற்போல் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் தனுஷின் நடிப்பு அனைவர் இடத்திலும் தெரியவந்து தனுஷ் முன்னணி ஹீரோவானார்.

மாரி 2’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது. அதில் பேசிய தனுஷ், “நான் ‘துள்ளுவதோ இளமை’ நடிச்சுக்கிட்டு இருந்தபோது, செல்வா சாரும், யுவன் சாரும்தான் க்ளோஸ். அப்போதே நான் பிரம்மிச்சுப் பார்க்குற ஸ்டார் யுவன். செல்வா சாரும், யுவன் சாரும் அப்பப்போ வெளியில் போகும்போது, செல்வா சார் என்னைக் கூப்பிட்டு, ‘என் தம்பி, இவனும் சும்மா கூட வரட்டும்’ என்று யுவனிடம் சொல்வார்.

யுவனும் வரச்சொல்லுய்யா என என்னை அழைத்து செல்வார். அந்த படத்தின் பாடல்களை மிக அருமையாக யுவன் செய்திருந்தார்.

அஸ்திவாரம் தான் இருக்குறதுலயே ஸ்ட்ராங். செல்வராகவன் எப்படி நடிப்புல எனக்கு அஸ்திவாரமோ, ‘துள்ளுவதோ இளமை’ மற்றும் ‘காதல் கொண்டேன்’ படங்கள் மிகப்பெரிய ஹிட்டாக யுவன் இசை தான் காரணம். அந்த அஸ்திவாரத்தைப் போட்டுக் கொடுத்ததில் யுவன் சாருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

துள்ளவதோ இளமை’ படம் ஆள் அட்ரஸ் தெரியாத 6 புதுமுகங்களை வச்சு எடுக்குறாங்க. அந்தப் படத்துக்கு அடையாளம் கொடுத்தது அவருடைய இசை தான்.

அந்த இசை இல்லேன்னா, அந்தப் படத்துக்கு ஓப்பனிங் கிடைச்சுருக்காது. அந்தப் படம் ஓடலைன்னா, நிஜமாகவே நாங்க நடுத்தெருவுல தான் நின்னுருக்கணும். அந்த சூழ்நிலையிலதான் அன்னிக்கு இருந்தோம். யுவனுக்கும், அவருடைய இசைக்கும் நாங்க கடமைப்பட்டிருக்கோம். இவ்வாறு தனுஷ் பேசினார்

Continue Reading

அதிகம் படித்தவை

To Top