பாடிய வரியை திரும்ப திரும்ப பாடி அதிசயிக்க வைத்த தெய்வீக பாடகர்.

பித்துக்குளி முருகதாஸ் இறையருள் பாடகர் இவர். கடந்த 2015ம் ஆண்டு முருகனுக்கு உகந்த கந்த சஷ்டியன்று இறைவனடி சேர்ந்தவர் இவர். எண்ணற்ற இசைக்கருவிகளை இசைத்து பலர் பாடினாலும் இவருக்கு வெறும் ஆர்மோனியம் மட்டுமே பிரதானமாக இருந்தது.

இளவயதில் கண்பார்வையை இழந்தவர் இவர். இருப்பினும் முருகன் மீது கொண்ட பக்தியால் தொடர் முருகபக்தி பாடல்களை மட்டுமே பாடியவர் இவர்.

மிகப்பெரும் முருக பக்தரான சாண்டோ சின்னப்பா தேவர் தான் தயாரித்த தெய்வம் படத்தில் எல்லா முருகன் கோவில்களை மையமாக வைத்து ஒரு உண்மை கதையும் அந்த கதையின் முடிவில் அப்போதைய பிரபல பாடகர்கள் யாராவது அந்த கதை சம்பந்தப்பட்ட தலத்தில் இசைக்கச்சேரி செய்வது போல காட்சியமைக்கப்பட்டிருந்தது.

அதில் சுவாமி மலை சம்பந்தப்பட்ட காட்சியில் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் பாடுவது போல் காட்சியமைத்திருந்தார்கள்.

நாடறியும் நூறு மலை என ஆரம்பிக்கும் அந்த பாடல் கடைசி வரை வித்தியாசமாக ஹார்மோனியம் மட்டுமே பயன்படுத்தி இசைக்கப்பட்டிருந்தது. அதிலும் பித்துக்குளி முருகதாஸ் தான் பாடிய வரிகளையே திரும்ப திரும்ப வித்தியாசமாக பாடுவார். இறை பக்தியாளர்களை இவரது மெய் சிலிர்க்க வைக்கும்.

இவர் தைப்பூசத்தன்று பிறந்தவர் முருகனுக்குரிய கந்த சஷ்டி நாளில் மறைந்தார்.