தேவராட்டம் படத்தின் மண் மணக்கும் அதிர வைக்கும் பாடல்

நடிகர் கார்த்திக் நடித்த காலத்தில் அதிகப்படியான மதுரை மண் சார்ந்த படங்களில் நடித்துள்ளார். பாண்டி நாட்டு தங்கம், பெரிய வீட்டு பண்ணக்காரன் உள்ளிட்ட அவரின் சில படங்களை கூறலாம்.

ஆனால் மிகவும் மாடர்னாக அறிமுகமான கெளதம் கார்த்திக் பேண்ட், சர்ட் போட்டு கொண்டு ஆடும், பாடும் படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

கிராமத்து நாகரீகங்களிலோ, மதுரை சுற்றுவட்டார பகுதிகளிலோ அவ்வளவாக நடித்ததில்லை அவர் நடித்த முத்துராமலிங்கம் உள்ளிட்ட படங்களும் போதிய வெற்றியை பெறவில்லை. அதை ஈடுகட்டும் விதமாக தேவராட்டம் படத்தில் அதிரடி கிராமநாயகனாக களமிறங்கும் கெளதம் கார்த்திக் ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருப்பதாகவும் படம் நன்றாக வந்திருப்பதாகவும் தகவல்கள் உலாவுகின்றன.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் லிரிக் வீடியோ மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரை பளபளக்குது என்ற இந்த பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கெளதம் கார்த்திக்கு ஜோடியாக இப்படத்தில் மஞ்சிமா நடித்துள்ளார்.