Connect with us

சிறையில் 39 பிரசவங்கள் நடந்துள்ளன. கல்லூரி மாணவியின் ஜாமீன் வழக்கில் காவல்துறை தகவல்

செய்திகள்

சிறையில் 39 பிரசவங்கள் நடந்துள்ளன. கல்லூரி மாணவியின் ஜாமீன் வழக்கில் காவல்துறை தகவல்

டெல்லி சிறையில் இதுவரை 39 பிரசவங்கள் நடந்துள்ளதாகவும் எனவே கர்ப்பிணி என்பதற்காக கல்லூரி மாணவிக்கு ஜாமீன் வழங்க அனுமதிக்க முடியாது என்றும் டெல்லி காவல்துறை, டெல்லி உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது
சிஏஏ சட்டத்தை எதிர்த்து கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் காரணமாக ஜாமியா பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஷர்கார் என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவர் மீது தீவிரவாத தடுப்புச் சட்டம், உபா சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது

ஷர்கார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டபோது அவர் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘தான் கர்ப்பிணியாக இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் ஷர்கார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது ஷர்கார் ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 10 ஆண்டுகளில் டெல்லி சிறைச்சாலையில் 10 பிரசவம், நடந்துள்ளதாகவும், ஷர்கார் தனி அறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு தினமும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் வாதாடப்பட்டது.

மேலும் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் கடுமையானது என்பதால் அவர் கர்ப்பிணி என்பதால் அவருக்கு விலக்கு அளித்து ஜாமின் வழங்க அனுமதிக்க கூடாது என்றும் காவல்துறை தரப்பினர் வாதிட்டனர். இதையடுத்து இந்த வழக்கு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top