ஷெரீன் மீது காதல் கொண்ட தர்ஷன்..!

பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். 


கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீடு கலகலப்பாக இருக்கக் காரணம்,   கொடூரக் கொலை டாஸ்க் ஹவுஸ்மேட்சை கலகலப்பாகி வருகிறது. அந்தவகையில், நேற்று முன்தினம் நடந்த இந்த டாஸ்க்கில் வேடிக்கையான முறையில் சாக்‌ஷி மற்றும் மோகன் வைத்தியா கொல்லப்பட்டனர். 

ஷெரீன் மீது காதல் கொண்ட தர்ஷன்..!



அதே டாஸ்க் நேற்றும் தொடர்ந்தது. அதன்படி, தர்ஷன் ஷெரீனுக்கு முத்தம் கொடுத்து அவரை கொலை செய்தார். அதேபோல, முகின் ராவ் ரேஷ்மா மீது கோல்டு காபியை கொட்டி அவரை கொலை செய்தார்.

போட்டியாளர்களுக்கு எவ்வித சந்தேகமும் எழுந்துவிடாத படி, வனிதா மற்றும் முகின் ராவ் இருவரும் கச்சிதமாக கொலைகளை அரங்கேற்றி வருகின்றன. தவிர, இந்த கொலைகள் நடப்பதற்கு காரணம் அப்பாவிகளான லோஸ்லியா மற்றும் மதுமிதா தான் காரணம் என்கிற பிம்பத்தை கட்டமைத்து விட்டனர். 

குறிப்பாக கோல்டு காபி ஊற்றப்பட்டு கொல்லப்பட்ட ரேஷ்மா, லோஸ்லியா தான் கொலையாளி என்று உறுதியாக நம்புகிறார். இதை கொல்லப்பட்ட சாக்‌ஷி, மோகன் வைத்தியா, ஷெரீன் ஆகியோர் மனங்களிலும் நம்ப வைத்துவிட்டார். 


இந்த டாஸ்கின் நடுவே மேலும் ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. அதில், அனைத்து போட்டியாளர்களும் கொல்லப்பட்டவர்கள் குறித்த புகழுரையை கூறவேண்டும் என்று கூறப்பட்டது.

அதில் தர்ஷன் ஷெரின் மீது கொண்ட காதலை நகைச்சுவையாகக் கூறினார்.