Connect with us

நாடகங்களுக்கு நான் பொறுப்பு- கிரேஸி மோகன் தம்பிக்கு நம்பிக்கை அளித்த கமல்

பொழுதுபோக்கு

நாடகங்களுக்கு நான் பொறுப்பு- கிரேஸி மோகன் தம்பிக்கு நம்பிக்கை அளித்த கமல்

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற வசனகர்த்தா கிரேஸி மோகன். சிறப்பான தனது காமெடி வசனங்களால் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர். நடிகர் கமலஹாசனும் இவரது நெருங்கிய தோழர்கள். கமல்ஹாசனின் பெரும்பாலான நகைச்சுவை படங்களுக்கு வசனம் கிரேஸி மோகனே.

இவர் சினிமா தவிர மேடை நாடகங்களும் நடத்தி வந்தார். உடன் அவரது தம்பி மாது பாலாஜியும் பணியாற்றி வந்தார்.

கிரேஸி மோகனின் தம்பியும் நடிகருமான மாது பாலாஜி சமீபத்தில் கூறுகையில் கிரேஸி மோகன் இறந்துவிட்டதால் நாடகங்கள் அழிந்து விடுமோ நாடகங்கள் போட முடியாமல் போய் விடுமோ என குழப்பம் அடைய வேண்டாம். எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்க சபா புக் பண்ணுங்க என கமல் ஆறுதல் கூறியுள்ளாராம்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top