திமுக வெற்றி பெற்றால் பாஜகவுடன் சேரும்- சி.ஆர் சரஸ்வதி

டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் முன்னணி நிர்வாகியான சி.ஆர் சரஸ்வதி சிவகங்கை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் தேர்போகி பாண்டியை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர் திமுகவை கடுமையாக சாடினார்.

2014-ம் ஆண்டு பாஜக தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்புத் திட்டம் இடம்பெற்றிருந்தது. ஆனால் ஒரு நதியை கூட இணைக்கவில்லை.

அந்த அறிக்கையை மீண்டும் காப்பி எடுத்து வெளியிட்டுள்ளனர். நதிநீர் இணைப்பு அறிவிப்பை வரவேற்கி றேன் என்கிறார் நடிகர் ரஜினி. அதற்கு நேரடியாகவே பாஜகவை ஆதரிக்கிறேன் என்று சொல்ல வேண்டியது தானே? தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் பாஜகவுடன் சேர்ந்துவிடும் என்றார்.