மார்ச் 6 வரை காவல் நீட்டிப்பு: கார்த்திக் சிதம்பரம் அதிர்ச்சி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு மார்ச் 6 ஆம் தேதி வர் சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதால் கார்த்திக் சிதம்பரம் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அதிரடியாக சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை நேற்றே டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவருக்கு ஒருநாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

இந்த நிலையில் கார்த்திக் சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மார்ச் 6ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.