கோர்ட் சீன்களில் பட்டையை கிளப்பிய தமிழ்படங்கள்

சுதந்திரத்துக்கு முன்பு வந்த தமிழ் படங்களிலேயே கோர்ட் காட்சிகள் உள்ள படங்கள் இருக்கும் .இருப்பினும் 50களுக்கு பின்னர் வந்த படங்களிலேயே கோர்ட் காட்சிகள் அதிகம் இருந்தது.

தமிழ்ப்படங்களில் கோர்ட் சீன்கள் அதிகம் உள்ள படமாக பராசக்தி வந்தது. காலச்சூழ்நிலையால் தங்கை கல்யாணியை பிரிந்து, மற்றும் உடன் பிறந்த உறவுகளை பிரிந்து சமுதாயத்தால் குற்றவாளியாகி நிற்கும் ஒரு மனிதனை பற்றிய கதை இது.

கிருஷ்ணன் பஞ்சு இயக்கி இருந்தார். கலைஞர் கதை வசனத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சிவாஜியின் முதல் படம் இது.

வசனங்கள் மிக கூர்மையாக இருந்தன.

பின்னாட்களில் இதே கலைஞர் வசனத்தில் பாசப்பறவைகள் படம் வந்து மிகப்பெரும் வெற்றி பெற்றது. கணவன் சாவுக்கு அண்ணன் தான் காரணம் என தவறாக புரிந்து கொண்ட தங்கை அண்ணனுக்கு எதிராக வழக்கு தொடுக்க தொடர்ந்து வரும் கோர்ட் சீன்கள் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வர வைத்தன.

மலையாள இயக்குனர் விஎம் சி ஹனிபா இயக்க கலைஞர் வசனம் எழுதி பாடல்களாலும், கதை திரைக்கதையாலும் மிகுந்த வெற்றி பெற்ற படமிது. இளையராஜா இசையமைத்து இருந்தார். சிவக்குமார் , மோகன், லட்சுமி, ராதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கலைஞர் வசனத்தில் கோர்ட் சீன்கள் வரும். ஆனால் தன்னுடைய பெரும்பான்மையான படங்கள் அனைத்தையும் கோர்ட் சீன்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்வார் எஸ்.ஏ சந்திரசேகர்.

முதன் முதலில் சட்டம் ஒரு இருட்டறை என அண்ணா சொல்லிய வார்த்தையை தனது படத்துக்கு வைத்தார் எஸ்.ஏ சி படத்தில் பெரும்பாலான காட்சிகள் இப்படத்தில் கோர்ட் காட்சிகளாகவே அமைந்தன. வெற்றியும் பெற்றது இப்படம்.

அடுத்ததாக நீதியின் மறுபக்கம், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட கோர்ட் சீன்கள் அதிகம் படத்தை இயக்கினார். இதில் நான் சிகப்பு மனிதன் படத்தில் பாக்யராஜ், ரஜினி, அம்பிகா சம்பந்தமான கோர்ட் சீன்கள் பட்டையை கிளப்பின.

குடும்பத்தை இழந்த ஒருவன் ஏழைப்பங்காளன் ராபின் ஹூட் ஆக மாறி கொலை செய்து கோர்ட்டில் வாதாடும் காட்சிகள் இப்படத்தில் அதிகம் உண்டு.

நீதிக்கு தலைவணங்கு என்றொரு படம் இதுவும் எஸ் ஏ சி படம்தான் கோர்ட் வசனங்களின் பிதாமகனான எஸ்.ஏ சியும் கலைஞரும் இணைந்த படமிது. பாரதியார் பாடலான சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற பாடல் மூலம் பின்னணி பாடகி ஸ்வர்ணலதா இதில்தான் அறிமுகமானார்.

எஸ்.ஏ சி தனது சுக்ரன் படத்தில் அவரது மகன் விஜயை சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார். விஜயும் காதலர்களை காப்பாற்றும் அற்புத கதாபாத்திரத்தில் வக்கீலாக நடித்திருப்பார்.

எண்பதுகளில் மோகன் நடித்த விதி படம் , ஒரு பெண்ணை ஏமாற்றி சீரழித்த நபர் எப்படி சட்டத்தின் கைகளில் சிக்குகிறார் என்பதை விளக்க அதிக கோர்ட் காட்சிகளுடன் சுஜாதா, பூர்ணிமா, மோகன் நடிக்க வெளியாகி மிகுந்த வெற்றி பெற்றது. விஜயன் இயக்கி இருந்தார்

90களின் ஆரம்பத்தில் மலையாள இயக்குனர் மது இயக்கிய மெளனம் சம்மதம் படம் சிறந்த சஸ்பென்ஸ் காட்சிகளுடன் கோர்ட் சீன்கள் அதிகம் உள்ள படமாக வந்தது. ஒரு கொலையை கண்டுபிடிக்க சிறப்பு வக்கீலாக டெல்லியில் இருந்து வந்து வாதாடுபவராக மம்முட்டி அதிரடி காட்டி இருந்தார்.

மஜீத் இயக்கத்தில் எல்லா அதிகாரிகள் செய்யும் தவறுகளையும் அடிப்படை சட்டங்களை மக்கள் புரிந்து கொள்வதற்காக தமிழன் படம் வந்தது. விஜய் இதில் அடிப்படை சட்டங்களை அழகாக மக்களுக்கு விளக்கி இருப்பார். விஜய் நடிப்பில் வந்த சிறந்த படம் இது.

கோர்ட் காட்சிகள் அதிகம் உள்ள படங்கள் தற்போது அதிகம் வருவதில்லை என்ற எண்ணத்தை மாற்றும் வகையில் உதயநிதி நடித்து சமீபத்தில் வந்த மனிதன் படம் பெரும் வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது. அஹமது இயக்கி இருந்தார்.