Connect with us

இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 18 பேருக்கு கொரோனா.. குடும்பத்தினர்மீது வழக்குப்பதிவு!

செய்திகள்

இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 18 பேருக்கு கொரோனா.. குடும்பத்தினர்மீது வழக்குப்பதிவு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பானது ஒருநாளைக்கு 8000 என்ற எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றது. அதிலும் கொரோனா பாதிப்பானது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற 5 மாநிலங்களில் தலைவிரித்தாடுகிறது. மொத்தமாக எடுத்துக் கொண்டால் 11 நகரங்கள் பெரிய அளவில் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது.

அந்த வகையில் நாட்டிலேயே அதிக அளவு கொரோனா பாதித்தோரைக் கொண்டு முதல் இடத்தில் மகாராஷ்டிரா தொடர்ந்து நீடித்து வருகிறது, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது நாட்டில் பாதி அளவாக உள்ளது.

இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 18 பேருக்கு கொரோனா.. குடும்பத்தினர்மீது வழக்குப்பதிவு!

இந்தநிலையில், மகாராஷ்டிராவால் இறந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகரினைச் சார்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கொரோனா இருந்தது இறந்ததற்குப் பின்னர் நடத்தப்பட்ட சோதனையில்தான் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது, இறந்த பெண்ணின் உடலை வெளியே எடுக்கக்கூடாது என்று மருத்துவமனையில் வலியுறுத்திக் கூறியநிலையில், இறுதிச் சடங்கில் 70 பேர் கலந்து கொள்ள போலீசார் இவர்கள்மீது வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் அந்த 70 பேருக்கு பரிசோதித்துப் பார்க்கையில் 18 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
To Top