Connect with us

மீண்டும் மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு: தொண்டர்கள் அதிர்ச்சி

செய்திகள்

மீண்டும் மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு: தொண்டர்கள் அதிர்ச்சி

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவருடைய குடும்பத்தில் மேலும் மூன்று பேருக்கும் கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் திமுக தொண்டர்கள் மீளாத நிலையில் தற்போது மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்தது. ஆனால் அதை அன்பழகன் தரப்பினர் மறுத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பொதுமக்கள் மட்டுமின்றி எம்எல்ஏக்கள் உள்பட பிரபலங்களும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Continue Reading
To Top