பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் ஒப்பந்த பொறியாளர் வேலை

மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) காலியாக உள்ள ஒப்பந்த பொறியாளர் (Contract Engineer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் ஒப்பந்த பொறியாளர் வேலை

காலிப் பணியிடங்கள்:

ஒப்பந்த பொறியாளர் (Contract Engineer) பிரிவில் 25 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.E Mechanical Engineering, B.E Electronics and Communication Engineering and B.Tech Mechanical Engineering ஏதாவதொரு துறையில் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.23,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் http://www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=CONTRACT-ENGINEERS-2019-JUN-ENG-3-6-19.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி:19.06.2019