தேடப்பட்டு வந்த முத்துராஜ் கைது: கொலை வழக்கும் பதிவு

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அடித்தே கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட காவலர் முத்துராஜ் நேற்றிரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக காவலர் முத்துராஜ் தலைமறைவாக இருந்ததால் அவருடைய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் வீடுகளில் அதிரடியாக சிபிசிஐடி விசாரணை செய்து அவரை தீவிரமாக தேடிவந்தனர்

நேற்று இரவு முத்துராஜ் பைக் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து தீவிர விசாரணை செய்ததில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை மகன் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக அடுத்தடுத்து கைது நடவடிக்கை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கைதுசெய்யப்பட்ட காவலர் முத்துராஜிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது