சாம்ஸ் நடிக்கும் இயக்குனர் எழில் இயக்கும் காமெடி படம்

சாம்ஸை தெரியாத சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது. பல படங்களில் அற்புதமான காமெடிகளை வெளிப்படுத்தி இருப்பார். வடிவேலுவுடன் நடித்த நான் நகைக்கடைக்காரர் மகன் காமெடி எனும் கருப்பசாமி குத்தகைதாரர் பட காமெடி பெருமளவில் பேசப்பட்டது. அது போல் விழுந்துரும் விழுந்துரும் என சொல்லும் மது பாட்டில் கீழே விழும் காமெடியும் பேசப்பட்டது.

சந்தானத்துடன் அறை எண் 305ல் கடவுள் படத்தில் அடுத்தடுத்து பைக், கார், ப்ளைட் வாங்கும் ஜாவா சுந்தரேசனாக கலக்கி இருப்பார்.

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் மொழி பெயர்ப்பாளராக வந்து கலகலப்பூட்டி இருக்கும் சாம்ஸ் இயக்குனர் எழிலின் பெரும்பாலான படங்களில் கலகலப்புக்கு முக்கிய காரணமாக இருப்பவர்.

இவர் இயக்குனர் எழில் இயக்கும் காமெடிப்படம் ஒன்றில் முக்கிய காமெடி வேடத்தில் இவர் நடிக்க இருக்கிறார்.