Connect with us

கம் பேக் தோனி… ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்!!

விளையாட்டு

கம் பேக் தோனி… ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்!!

உலகக்கோப்பை முடிந்து தோனியின் ஓய்வுகுறித்த அறிவிப்பினை பலரும் எதிர்பார்த்திருக்கையில், அவர் இரண்டு மாத காலத்திற்கு விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனால் தென் ஆப்ரிக்கா தொடரில் பங்கேற்கவில்லை. தற்போது வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் தோனி பங்கேற்கவில்லை.

அடுத்து ராணுவப் பணியில் 2 மாதங்களாக ஈடுபட்டுவந்த தோனி, மீண்டும் ஓய்வு தேவை என 2 மாதங்கள் விடுப்பில் இருந்தார். தற்போது அந்த ஓய்வுக்காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் வீரர்களான சச்சின், கம்பீர், கங்குலி, யுவராஜ் சிங்க் போன்றோரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

கம் பேக் தோனி… ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்!!

கங்குலி தன்னுடைய முதல் வேலையாக தோனியின் ஓய்வு குறித்து கேட்பதாக அறிவித்து இருந்தார். சமீபத்தில் ராஞ்சியில் நடைபெற்ற மாநில கிரிக்கெட் ஒன்றில் தோனி விளையாடினார்.

ஜார்கண்ட் மாநில அணியுடன் சேர்ந்து தோனி சமீபத்தில் பயிற்சி செய்தார், அவர் வலைப்பயிற்சி செய்யும் அந்த வீடியோவானது சமீபத்தில் வலைதளங்களில் வைரலானது.

வரும் டிசம்பர் 6 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் தோனி பங்கேற்பார் என்று தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் பலரும் இப்போதில் இருந்தே கம் பேக் தோனி என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி உள்ளனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top