கோவையில் ஒரு லட்சம் வாக்குகளைத் தாண்டிய மக்கள் நீதி மய்யம்!

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

Makkal Needhi Maiyyam

கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பி.ஆர். நடராஜனும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர். மகேந்திரனும் போட்டியிட்டனர்.

இதில் மார்க்சிஸ்ட் கட்சி 5 லட்சத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. பாஜக சுமார் 3.50 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார்.

இந்த தொகுதியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஒரு லட்சம் வாக்குகள் மேல் பெற்றுள்ளது.

மக்கள் நீதி மய்யம் தொடங்கி சந்திக்கும் முதல் தேர்தல் இது. தொடக்கத்திலேயே கணிசமான வாக்குகளைப் பெற்று மக்கள் நீதி மய்யம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.