பாலிவுட் சினிமா நட்சத்திரம் போல் மாறிய தேர்தல் அதிகாரி

உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரீனா திவிவேதி.பொதுப்பணித்துறையில் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணிபுரிகிறார்.

இவர் லக்னோவில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு தேர்தல் பணிக்காக சென்றார். இவரின் தோற்றம் பிரபல பாலிவுட் நடிகைகள் பலரை ஞாபகப்படுத்தியது. ஏதோ சினிமா நடிகைதான் அதிகாரியாக செல்கிறாரோ என நினைக்க வைத்தது.

அந்த அளவு இவரது தோற்றம் ஸ்டைல் இருந்ததால் ஒரே நாளில் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆனார்.

உமன் ஆன் யெல்லோ சாரி என்ற பெயரில் இவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் மாறி மாறி பகிர்ந்து மகிழ்ந்தனர் மக்கள்.

ஒரே நாளில் தன்னை நடிகை அளவு மக்கள் ரசித்தது தனக்கு மகிழ்ச்சி தனக்கு 9ம் வகுப்பு படிக்கும் மகன் இருக்கிறான் என அந்த அதிகாரி கூறி இருக்கிறார்.

உண்மையில் இவரை அடுத்து ஏதாவது ஒரு சினிமாவில் கண்டிப்பாக பார்க்கலாம் அதில் மாற்றுக்கருத்தில்லை.