சித்திரை திருவிழா மதுரையில் தேர்தல் நடக்குமா

நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது .

இந்த நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள அதே நாளில் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறவிருப்பதால், வாக்குப்பதிவில் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என மதுரை மக்கள் கூறி வருகின்றனர். 

எனவே, முக்கிய விழாவான சித்திரைத் திருவிழா நாளில் நடைபெற உள்ள தேர்தலை மாற்றி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையடுத்து, சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், சித்திரை திருவிழாவையொட்டி மதுரையில் மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்க கோரி,  அனைத்து கட்சிகள் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

போலீசார் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதாலும் சித்திரை திருவிழா அன்று பாதுகாப்பு பணிகளுக்கு செல்ல வேண்டி துணை ராணுவத்தை அதிக அளவில் வைத்தாவது தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.