குரு தோஷம் நீக்கும் பெருமாள் கோயில்!

Chitra Ratha Vallabha Perumal Temple

சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோயில் குருவித்துறை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குரு பகவான் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

Chitra Ratha Vallabha Perumal Temple

குருவானவர் ராஜகிரகம் என்றும் குரு பார்க்க கோடி நன்மை என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

பொதுவாக சிவன் கோவில்கள் முருகன் கோவில்கள் குரு சம்பந்தப்பட்ட கோவில்களாக அறியப்படுகின்றன.

தஞ்சை ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில்,திட்டை வசிஸ்டேஸ்வர் கோவில் போன்றவை குரு ஸ்தலமாக சொல்லப்பட்டாலும் இவை எல்லாம் சைவஸ்தலங்கள். வைணவ ஸ்தலங்களில் இப்படி ஒரு கோவில் உள்ளதா அதுவும் குரு பகவான் வீற்றிருக்கும் கோவில் உள்ளது ஒரு ஆச்சரியம்தானே.

குரு பார்க்க கோடி நன்மை என்றாலும் அஷ்டம குரு, குரு சனி இணைவு, தசாபுத்திகளில் குரு சரியில்லாத காலம், ஒருவருக்கு ஜாதகத்தில் குரு பலம் இல்லாதது போன்றவை அவருக்கு வாழ்க்கையில் துன்பங்களை தந்து கொண்டிருக்கும்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் இருக்கும் குருவித்துறை என்ற கிராமத்தில் உள்ள சித்திரவல்லப பெருமாள் திருக்கோவிலில் குரு தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

உலக நன்மைக்காக குருபகவான் இங்குள்ள வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால் இந்த இடம் குருவின் துறை ஆனது.

சித்திர வேலைப்பாட்டுடன் அமைந்த தேரில் பெருமாள் இங்கு குருவுக்கு காட்சி அளித்ததால் இங்குள்ள பெருமாள் சித்திர வல்லப பெருமாள் என அழைக்கப்படுகிறார். அழகிய தென்னந்தோட்டத்தில் இந்த பெருமாள் காட்சியளிக்கிறார்.

இங்கு தனி சன்னிதியில் உள்ள குருவை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்கினால் தொடர்ந்து வணங்கி வந்தால் குருவினால் ஏற்படும் தோசங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.