Connect with us

சின்னத்தம்பிக்காக பரிந்து பேசிய சின்னத்தம்பி

பொழுதுபோக்கு

சின்னத்தம்பிக்காக பரிந்து பேசிய சின்னத்தம்பி

கோவை அருகே மக்களை துன்புறுத்தியதாக சின்னத்தம்பி என்ற யானை பிடிக்கப்பட்டு நீண்ட தூரம் காட்டில் விடப்பட்டது.ஜேசிபியை வைத்து லாரியில் ஏற்றும்போது உடலில் புண் ஏற்பட்டதாகவும் வார இதழ்களில் படங்களோடு கட்டுரை வந்திருந்தது.

இதற்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர் . அதாவது சின்னத்தம்பி யானை மிகவும் அப்பாவி என்றும் அது குழந்தை போல் உள்ளது என்றும் அதை தேவையில்லாமல் அதன் குடும்பத்தை விட்டு பிரித்து நீண்ட தூரம் கொண்டு போய் விட்டு இருப்பதாக பலர் சமூக வலைதளங்களில் வனத்துறையை எதிர்த்து பதிவு இட்டிருந்தனர்.

இந்நிலையில் நடிகர் பிரபுவும் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். முழு முதற்கடவுள் விநாயகனின் அம்சமானது யானை. என்னைப்போலவே விநாயகரை அதிகம் பேருக்கு பிடிக்கும் அப்படிப்பட்ட யானையை குடும்பத்தை விட்டு பிரித்து வைத்திருப்பது தவறு. அதன் குடும்பத்தோடு சின்னத்தம்பியை சேர்க்க வேண்டும். சின்னத்தம்பி கும்கி யானையுடன் நல்ல முறையில் விளையாடி வருகிறது.

என் மகன் விக்ரம் பிரபு கும்கி படத்தில் நடித்திருக்கிறார். நானும் சின்னத்தம்பி என்ற படத்தில் நடித்திருக்கிறேன் எனவும் பிரபு கூறினார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top