போதும்டா சாமி, எதுக்கு பொண்ணா பொறக்குரோம்ன்னு இருக்கு: சின்மயி புலம்பல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே வருகிறது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறந்தாங்கியில் ஜெயப்பிரியா என்ற சிறிய 7 வயது சிறுமியை ராஜா என்பவன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து முட்புதரில் வீசி சென்ற சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது

அந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்னரேயே தற்போது 22 வயது பெண் ஒருவரை இரண்டு பேரும் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்ட, கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனை அடுத்து அந்தப் பெண் தற்போது தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் இதில் ஒரு முக்கிய கட்சியின் பிரமுகர் சம்பந்தப்பட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலைக்கு குரல் கொடுத்த எந்த பிரமுகர்களும் இந்த பெண்ணின் தற்கொலைக்கு துரதிஷ்டவசமாக குரல் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் இது குறித்த செய்திகளை பார்த்த பிரபல பாடகி சின்மயி அவர்கள் தனது ட்விட்டர் தளத்தில் ’போதும்டா சாமி! எதுக்கு பொண்ணா பொறக்குரோம்ன்னு தோணுது’ என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவிற்கு பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்