Connect with us

குழந்தைகளிடம் குறைந்து விட்ட கதைகள் கேட்கும் -படிக்கும் ஆர்வம்

செய்திகள்

குழந்தைகளிடம் குறைந்து விட்ட கதைகள் கேட்கும் -படிக்கும் ஆர்வம்

ஒரு காலத்தில் முல்லா கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், பஞ்ச தந்திர கதைகள், விக்கிரமாதித்தனும் வேதாளமும், தெனாலிராமன் போன்ற படக்கதைகள் வார இதழ்களில் இணைப்போடு வரும். மேலும் சின்ன சின்ன நீதிக்கதைகளும் வரும். அப்போது ஆண்ட்ராய்டு போன் எட்டி பார்க்காத அற்புத உலகமாக இருந்தது. சிறு குழந்தைகள் பள்ளிப்பாடம் படித்து முடித்த உடன் இது போல கதை புத்தகங்களை படிக்க ஆர்வம் காட்டுவர்.

அம்புலிமாமா என்றொரு புகழ்பெற்ற இதழே அப்போது இருந்தது. வந்த உடன் கடைகளில் கிடைக்காத நிலை எல்லாம் இருந்தது. உடனே விற்று தீர்ந்து விடும். மேலை நாட்டு சாகசக்கதைகளுக்காக நிறைய காமிக்ஸ் புத்தகங்களில் படக்கதைகளாக வரும். இது போல புத்தகங்களும் கடைகளில் விற்று தீர்ந்து கொண்டே இருக்கும். அந்த வாரம் வந்து விட்டால் அம்புலி மாமா, காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி கேட்கும் குழந்தைகள் இருந்தனர்.

குறிப்பாக விக்ரமாதித்தனும் வேதாளம் கதையில் சிறுவர்கள் எதிர்பார்க்கும் சஸ்பென்ஸ்,த்ரில், நகைச்சுவை, என எல்லாமே இருந்தன ஒவ்வொரு முறை வேதாளம் சொல்லும் கதைகளும் இறுதியில் அது போடும் கதை தொடர்பான புதிர்களும் சிறுவர்களின் அறிவை தூண்டின.

கதை படித்தது போக மாலை நேரங்களில் விளையாட்டு, கண்ணாமூச்சி, ஒளிந்து விடுவது, சிறிது நேரம் விளையாடிவிட்டு சாப்பிட்டு விட்டு அம்மாவிடமோ அப்பாவிடமோ குழந்தைகள் கதை கேட்டு தூங்கும் ஒரு பரவச உலகமாக இருந்தது.

இந்த நிலை தற்போது 5 சதவீதம்தான் உலகில் இருக்கிறது கதைகள் வாசிக்கும் பழக்கம் அறவே இல்லாத நிலையை எட்டிக்கொண்டுள்ளது. பிறந்து மூன்று மாதம் ஆன குழந்தை, ஆண்ட்ராய்டு போன் பாக்கெட்டில் இருப்பதை பார்த்தாலே அழுகையை நிறுத்துகிறது. ஓரளவு பக்குவமடைந்த குழந்தைகள் அப்பா , அம்மாவின் ஆண்ட்ராய்டு ஃபோன் நம் கையில் சிறிது நேரம் கிடைத்து விடாதா என பள்ளி விட்டு வந்த உடன் ஏங்குகின்றன.

அப்படியே மாறிவிட்டது உலகம். எந்த குழந்தைக்கும் இயற்கையாக கதைகள் படிக்கும் ஆர்வம் வருவதில்லை. வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகள் கைவிட்டு விட்டு யூ டியூப்பில் கதைகள் கேட்பது அதிகரித்து வருகிறது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top