Connect with us

ஆர்.எஸ்.பாரதி குறித்த ஸ்டாலின் அறிக்கை வேடிக்கையானது: முதல்வர் பழனிச்சாமி

செய்திகள்

ஆர்.எஸ்.பாரதி குறித்த ஸ்டாலின் அறிக்கை வேடிக்கையானது: முதல்வர் பழனிச்சாமி

ஆர்.எஸ்.பாரதி குறித்த ஸ்டாலின் அறிக்கை வேடிக்கையானது என்றும், ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் செய்கிறார் என்றும் அது கண்டிக்கத்தக்கது என்றும் முதல்வர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும் முக ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் செய்கிறார் என்றும் புகாரின் பெயரில் சட்டப்படி போலீஸ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆர்.எஸ்.பாரதி கைது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின், ‘கொரோனா நோய்த் தடுப்பில் தோல்வியைத் திசை திருப்ப தன் மீது ஊழல் புகார் அளித்த ஆர்.எஸ்.பாரதியின் மீதான பழைய புகாரைத் தட்டி எடுத்து கைது செய்துள்ளார்கள் என்றும், முதல்வர் எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது என்றும், அது தமிழக மக்களையும் திசை திருப்பாது என்றும் கூறியிருந்தார்.

மேலும் மூன்று மாதங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட புகாரின் மீது அதிகாலையில் கைது நடவடிக்கை எடுத்தது கண்டிக்கத்தக்கது என்றும் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top