Connect with us

முதல் நாளை வெற்றிகரமாக சீக்ரெட் ரூமில் கழித்த சேரன்!!

பொழுதுபோக்கு

முதல் நாளை வெற்றிகரமாக சீக்ரெட் ரூமில் கழித்த சேரன்!!

பிக் பாஸ் 3 ஆரம்பித்த சில நாட்களே ஆனதாகத் தெரிகையில், அதற்குள் 80 வது நாளை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த வார இறுதியில் சேரன் வெளியேற்றம் பிக் பாஸ் வீட்டினை சோகமாக்கியது.

சேரன் வெளியேறியபின் ஷெரின், வனிதா, லாஸ்லியா, கவின், சாண்டி, முகின், தர்சன் என அனைவரும் வருத்தப்பட்டனர்.

சேரனை வழியனுப்பி வைக்க குறும்படம் போடத் தயாரானபோது, பிக் பாஸ் கமல் ஹாசனிடம் குறும்படம் தேவையில்லை என்பதுபோல, சேரனுக்கு நிகழ்ச்சியில்  மீண்டும் தொடர ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாகக் கூறினார்.

முதல் நாளை வெற்றிகரமாக சீக்ரெட் ரூமில் கழித்த சேரன்!!

அதாவது சீக்ரெட் ரூமிற்கு செல்லுங்கள் என்று கூறினார். சீக்ரெட் ரூமில், வார்னிங், டிவி, உணவு ஆகியவற்றிற்கு உரிய லைட் உள்ளது பற்றித் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து கேட்க, அங்கே அனைவரும் சுற்றி இருந்தாலும், தனிமையில்தான் இருந்தேன் அதுபோல இதுவும் ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்கிறது என்று சொன்னார்.

முதல்நாளான நேற்று சேரன் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் விஷயங்களைப் பார்த்தார். அப்போது கவின்- லாஸ்லியா காதல் உரையாடல் ஆரம்பமானது, கவின் லாஸ்லியாவை காதலைப் பற்றி பேசுமாறு வற்புறுத்தினார், இதனால் சேரன் பிக் பாஸ் வீட்டில் காதல் குறித்து பேசமாட்டேன் என்று கூறியதோடு, இப்போது இப்படி செய்கிறார் என்று எச்சரிக்கை விடுத்தார். “

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top