Connect with us

கே.எஸ். ரவிக்குமாருக்கு நன்றிகளை தெரிவித்த சேரன்!!

பொழுதுபோக்கு

கே.எஸ். ரவிக்குமாருக்கு நன்றிகளை தெரிவித்த சேரன்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி 3 வேறு லெவலாகப் போய்க் கொண்டிருக்கிறது, கவின்- லாஸ்லியா காதல், சேரன்- லாஸ்லியா உறவில் விரிசல், சாண்டியின் மழலை கெட்டப், கஸ்தூரி- வனிதாவின் சண்டை, சேரனின் தனிமை என மசாலாவாக சென்று கொண்டிருக்கிறது.

நேற்றுடன் கிண்டர் கார்டன் டாஸ்க் முடிவடைந்தது, அதைத் தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் பிடித்த ஆசிரியர்களைப் பற்றிக் கூறுமாறு அறிவுறுத்தினார் பிக் பாஸ். அந்தக் கட்டளைக்கு ஏற்ப, போட்டியாளர்கள் அவர்களின் ஆசிரியர்கள் சிலர் அவர்களுடைய அம்மா என ஒவ்வொருவரும் சிலரைக் குறிப்பிட்டுப் பேசினர்.

கே.எஸ். ரவிக்குமாருக்கு நன்றிகளை தெரிவித்த சேரன்!!

அதில், கஸ்தூரி பேசியது மனதை துக்கத்தில் ஆழ்த்தும்படியாக இருந்தது. அவருக்கு அடுத்தபடியாக பேசிய சேரன், தன்னுடைய தாய் தன்னுடைய மனம் கவர்ந்த ஆசிரியர் என்று கூறத் தொடங்கினார், அவர் ஒரு ஆசிரியராகப் பணியாற்றிய காரணத்தினால் தன்னை மிக ஒழுக்கமாக வளர்த்ததாக குறிப்பிட்டார்.

அதன்பின்னர் வீட்டின் வறுமையினால் பள்ளிப்படிப்பிற்குப் பின் ஐ.டி.ஐ படித்ததாகவும், அப்போது அங்கு வேலைபார்த்த கல்லூரி ஆசிரியர் தனக்கு சினிமா பற்றிய தாக்கதினை ஏற்படுத்தியதாகவும் கூறினார், இறுதியில் என்னுடைய கனவுகளைப் புரிந்துகொண்டு, என்னை துணை இயக்குநராக ஏற்றுக்கொண்ட கே.எஸ். ரவிக்குமாருக்கு நன்றிகளை தெரிவித்தார். அவர் இல்லையேல் சேரன் இல்லை என்று கூறி, நான் எப்போதும் இந்த நன்றியினை வெளிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கேன் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top