சேரன் சீக்ரெட் ரூமில் உள்ளார்- கண்டுபிடித்த வனிதா!

சேரன் சீக்ரெட் ரூமில் உள்ளார்- கண்டுபிடித்த வனிதா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பெரிதளவில் சண்டை ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. சேரன் வெளியேறிய பின்னர் ஜாலியாக உணர்ந்த கவின், மீண்டும் லாஸ்லியாவிடம் காதல் குறித்து பேச சொல்லி வற்புறுத்தி வருகிறார். இவை அனைத்தையும் சேரன் சீக்ரெட் ரூமிலிருந்து கவனித்துக் கொண்டுள்ளார்.

நேற்றைய நிகழ்ச்சியில், ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது, பிக் பாஸ் வீட்டில் வனிதா, சாண்டி, முகென் ஆகியோர் ஒரு அணியாகவும், ஷெரின், தர்ஷன், கவின் ஆகியோர் ஒரு அணியாகவும் பிரிந்து டாஸ்க் செய்தனர்.

சேரன் சீக்ரெட் ரூமில் உள்ளார்- கண்டுபிடித்த வனிதா!

போட்டியின் நடுவராக இந்த வாரத்தின் வீட்டின் தலைவராக உள்ள லாஸ்லியா இருந்தார். இதில், ஒரு கட்டத்தில் உள்ள பந்தை எடுத்து தங்கள் பெட்டியில் போட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. மிகச் சிறப்பாக விளையாடி வனிதா அணி வெற்றி பெற்றது.

அதன்பின்னர், சீக்ரெட் ரூமிலிருந்து சேரன் கேள்விகள் கேட்கலாம் என பிக் பாஸ் கூற, அதன்படி அவர் லாஸ்லியா, கவின் மற்றும் வனிதாவிடம் கேள்விகளை எழுப்பினார்.

அப்போது சேரன் ரகசிய அறையில்தான் இருக்கிறார் என்று ஹெஸ் பண்ணி சொன்னார் வனிதா. மேலும் அண்ணா நீங்க இங்க தானே இருக்கீங்க என உணர்ச்சி பொங்க கத்தினார்.