சீக்ரெட் ரூமிலிருந்து வனிதாவை பாராட்டிய சேரன்!!

சீக்ரெட் ரூமிலிருந்து வனிதாவை பாராட்டிய சேரன்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பெரிதளவில் சண்டை ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமில் தனிமையில் உள்ளார்.

நேற்றைய நிகழ்ச்சியில், முகின் தாயாரும் தங்கையும் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தனர், அவை அனைத்தையும் உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் சேரன்.

மேலும் சேரன், போட்டியாளர்களிடம் கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம் என்று பிக் பாஸ் கூற, சேரன் கேட்டார். முதல் கேள்வியினை லாஸ்லியாவிடம் கேட்டார்.

இரண்டாவது கேள்வியினை கவினிடம் கேட்டார். மூன்றாவது கேள்வியினை வனிதாவிடம் கேட்டார்.

நான் வெளியேறிய பின்னர் அமைதியாக யாருடனும் பேசாமல், கேப்டன்சி டாஸ்க்கை நிராகரித்து விட்டு வேலை செய்தாய். பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது. நாமினேஷன் பார்த்துவிட்டுத் தான் பேசுகிறேன், அந்த வனிதா நியாயமாக உள்ளதாக எனக்குத் தெரிகிறது. தனது கருத்தை சுருக்கமாக கூறும் வனிதாவாக இருப்பாயா? என்று கேட்டுள்ளார்.

அப்போது வனிதா, இந்த போட்டியை எப்படி விளையாட வேண்டும் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது.

நாமினேஷனில் எப்படி பேச வேண்டும் என்று இப்போது தெரிந்து கொண்டேன். நீங்கள் சொல்வது எனக்கு புரிந்தது அண்ணா, நன்றி என்று சொன்னார்.