சென்னை தண்ணீர் பிரச்சினை குறித்து பேசிய ஹாலிவுட் நடிகர்

சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு கடும் மழை பெய்தது. பல இடங்கள் இந்த மழையால் பாதிக்கப்பட்டன. அத்தோடு மழையே பெய்யாமல் சென்னை மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகமும் பாதிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் பல இடங்களில் உணவகங்கள், சாப்ட்வேர் கம்பெனிகள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த விசயம் சர்வதேச அளவிலும் எதிரொலித்து வருகிறது இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி காப்ரியோவும் பதிவிட்டுள்ளார்.

சென்னைக்கு ஆதாரமாக உள்ள நீர்நிலைகள் வறண்டுவிட்டன . தென் இந்தியாவின் முக்கிய நகரமான சென்னைக்கு நீர் ஆதாரமாக உள்ள நான்கு நீர்நிலைகள் வறண்டு விட்டன, ஹோட்டல்களும் உணவகங்களும் தற்காலிமாக மூடப்பட்டு வருகின்றன என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.