Connect with us

சென்னையில் பேருந்துகள் ஓடப்போகிறதா? போக்குவரத்து ஆணையரின் உத்தரவால் பரபரப்பு

செய்திகள்

சென்னையில் பேருந்துகள் ஓடப்போகிறதா? போக்குவரத்து ஆணையரின் உத்தரவால் பரபரப்பு

தமிழகம் முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், அந்த தளர்வுகள் சென்னைக்கு மட்டும் பொருந்தாது என அறிவிக்கப்பட்டதால் சென்னை மக்கள் பெரும் சிக்கலில் உள்ளனர். டாஸ்மாக், சலூன்கள், ஆட்டோ உள்ளிட்ட எந்த தளர்வுகளும் சென்னை மக்களுக்கு இல்லை

இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் உத்தரவு பிறப்ப்பித்துள்ளார். மேலும் பணிக்கு வரும் பணியாளர்கள் முகக்கவசம், கை உறை அணிய வேண்டும் என்றும், பணியாளர்கள் கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவ வேண்டும் என்றும் மேலாண்மை இயக்குநர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையிலுள்ள அனைத்து போக்குவரத்து டெப்போக்களிலும் உள்ள 1,775 பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு சான்றிதழ் வாங்க வேண்டியுள்ளதால் பணியாளர்கள் பணிக்கு வர உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், 2 நாளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 50 % பணியாளர்கள் உடனடியாக பணிக்கு வர மேலாண்மை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து சென்னையில் மிக விரைவில் பேருந்துகள் ஓடும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

Continue Reading
To Top