ஐபில் போட்டிகளில் 100வது வெற்றியைப் பெற்று சாதனைப் படைத்த மும்பை அணி!

CSK vs MI: ஐபில் 2019 தொடரின் 15வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே மும்பையில் உள்ள வான்கடே மைதனாத்தில் நடைப்பெற்றது.

Mumbai Indians

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புகளுடன் 170 ரன்கள் எடுத்தது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் ரன்களைக் கட்டுப்படுத்திய சென்னை அணி இறுதி ஒவர்களில் ரன்களை கட்டுப்படுத்தவில்லை. அதிலும் 19 ஓவரில் 19 ரன்களும் 20 ஓவரில் 29 ரன்களும் மும்பை எடுத்தது. இதுவே சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி ஆரம்பத்திலேயே தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்ததால் தடுமாறியது. கேதார் ஜாதவ் மற்றும் தோனி இணைந்து சிறிது நேரம் ரன் சேர்த்தாலும் அது போட்டியின் வெற்றிக்கு உதவும் வகையில் இல்லை. கேதார் ஜாதவ் மட்டும் 54 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களையே எடுத்தனர். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புடன் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மும்பை அணிக்கு இது ஒரு சாதனை வெற்றியாகும். இந்த வெற்றி ஐபில் தொடர்களில் மும்பை அணியின் 100வது வெற்றியாகும். இதுவரை 175 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 100 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் 100 வெற்றிகளைப் பெற்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை அணிப் பெற்றுள்ளது.

இதுவரை 152 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 93 வெற்றிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த ஐபில் தொடரில் சென்னை அணியும் 100வது வெற்றியை எட்டும் என்று எதிர்ப்பார்க்கலாம்.