கடைசி ஓவர் வரை சென்று வெற்றிப் பெற்ற சென்னை அணி!

ஐபில் தொடரின் 5வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே டெல்லியில் நடைப்பெற்றது.

Chennai super kings

இந்தப் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புடன் 147 ரன்களை எடுத்தது. அதிகப்பட்சமாக ஷிகர் தவான் 51 ரன்களும், ரிஷப் பண்ட் 25 ரன்களும், பிரித்வி ஷா 24 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 18 ரன்களும் எடுத்தனர்.

சென்னை அணியில் டிவைன் பிராவோ 3 விக்கெட்டுகளும், தீபக் ஷாஹர், ரவீந்திர ஜடேஜா மற்றும் இம்ரான் தாஹிர் மூவரும் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

டெல்லி அணி, சென்னை அணிக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது.

அடுத்து களமிறங்கிய சென்னை அணியின் அம்பதி ராயுடு 5 ரன்களில் வெளியேறினார். ஆனாலும் ஷேன் வாட்சன் மற்றும் சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். ஷேன் வாட்சன் 26 பந்துகளில் 44 ரன்களும், சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

கேதார் ஜாதவ் மற்றும் தோனி இருவரும் மிகவும் நிதனமாக விளையாடியதால் போட்டி கடைசி ஓவர் வரை சென்றது. கடைசி ஓவரில் கேதார் ஜாதவ் 34 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி 3 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் டிவைன் பிராவோ 4 ரன்கள் அடித்தார். இதனால் சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புடன் 150 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இப்போட்டியில் ஷேன் வாட்சன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.