Connect with us

கொரோனாவுக்கு பலியான சென்னை காவல் ஆய்வாளர்: அதிர்ச்சித் தகவல்

செய்திகள்

கொரோனாவுக்கு பலியான சென்னை காவல் ஆய்வாளர்: அதிர்ச்சித் தகவல்

கொரோனாவால் பாமரன் முதல் பதவியில் இருப்பவர்கள் வரை அவ்வப்போது பலியாகி வரும் நிலையில் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

வேலூரை சேர்ந்த பால முரளி என்பவர் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஆக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவருக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சமீபத்தில் அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடையவே சென்னை காவல் நிலைய ஆணையர் ஏகேவிசுவநாதன் அவர்கள் தனது சொந்த செலவில் 2.25 லட்சத்துக்கு மருந்து வாங்கிக் கொடுத்தார் இந்த மருந்தை உட்கொண்டதால் ஓரளவுக்கு உடல்நிலை தேறி வந்தாலும் இன்று மீண்டும் அவருடைய உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்

கொரோனாவால் மரணம் அடைந்த பாலமுரளி அவர்களுக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் என்பதும், மகள் எட்டாவது வகுப்பும், மகன் 4ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஒருவர் மரணம் அடைந்துள்ளது சென்னை காவல் துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

Continue Reading
To Top