Connect with us

கொரோனாவில் இருந்து மீண்டு, பணிக்கு திரும்பிய சென்னை செவிலியர் கொரோனாவால் மரணம்

செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்டு, பணிக்கு திரும்பிய சென்னை செவிலியர் கொரோனாவால் மரணம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செவிலியர் ஒருவர் தீவிர சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீண்டு, மீண்டும் பணிக்குத் திரும்பிய போது மறுபடியும் அவருக்கு கொரோனா தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் செவிலியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவர் முற்றிலும் குணமாகியதை அடுத்து, மீண்டும் அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செவிலியர் பணிக்கு திரும்பினார்

இந்த நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அவருக்கு சோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதியாகியது. இதனை அடுத்து மீண்டும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்ததாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனாவில் இருந்து மீண்டு, மீண்டும் பணிக்குத் திரும்பிய செவிலியர் ஒருவர் கொரோனாவாலேயே உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செவிலியரின் கணவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top