380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை!

தமிழகத்தின் தலைநகர், உலகின் நீண்ட கடற்கரையைக் கொண்ட மாவட்டம், தென்னிந்தியாவின் நுழைவு வாயில், படிச்சவனுக்கு ஐ.டி கம்பெனி படிக்காதவனுக்கு நைட்டி கம்பெனி, பெங்களூருவிற்கு அடுத்தபடியாக ஐ,டி. ஹப்பில் 2 வது இடத்தில் உள்ள நகரம், தமிழகத்தின் முன்னோடி மாவட்டம், தமிழகத்தின் அனைத்து ஊர் மக்களையும் கொண்ட ஒரு நகரம், தென்னிந்தியாவின் சிறந்த தொழில்நகரங்களில் ஒன்று என பல பெயர்களைக் கொண்டது நம்ம சென்னை.

சென்னைக்கு இன்னைக்கு பிறந்தநாளா? ஆமாங்க 380 வது பிறந்தநாள். சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமே இன்று சென்னை மாநகரமாக தோன்றியுள்ளது. 

f045e73f22f6f21d8f38bf07cc4eff53

1600 களில் ஆங்கிலேயர் ஆதிக்கம் சென்னையில் அடியெடுத்து வைக்க ஆரம்பித்தது, துருக்கியர்கள், டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், டேனியர்கள் என ஒவ்வொருவராய் இந்தியாவிற்குள் நுழைந்தனர்.

வாணிகம் செய்ய நுழைந்த இவர்கள் அவரவர் பங்குக்கு அதிகாரத்தன்மையினை நிலைநாட்டுவதிலேயே குறிக்கோளாக இருந்தனர்.  இவர்களால் ஆங்கிலேயர் வருகைக்குப் பின் இந்தியாவில் பெரிதளவில் சோபிக்க முடியவில்லை.

ஆங்கிலேயர்கள் ஒவ்வொருவராய் நுழைந்து வாணிகம் செய்ய திட்டமிட்டனர். அப்போது  1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி ஒரு நிலப்பகுதியை பிரான்சிஸ் டே விலைக்கு வாங்கினார். அது வேறு எந்த இடமும் அல்ல சென்னைதான். அன்றைய நாள்தான் சென்னை பிறந்த நாளாக கருதப்படுகிறது.

380 வது வயதினைக் கடந்து சென்னை கம்பீரமாக நிற்பதன் பின்னணி இதுதான். சமூக வலைதளங்களில் அனைவரும் சென்னைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்ததுடன் கொண்டாடி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.