Connect with us

சென்னையில் இருந்து யாராவது வந்தால்…. கர்நாடக முதல்வர் எச்சரிக்கை

செய்திகள்

சென்னையில் இருந்து யாராவது வந்தால்…. கர்நாடக முதல்வர் எச்சரிக்கை

தமிழகத்தில் இருந்து குறிப்பாக சென்னையில் இருந்து கர்நாடகாவிற்கு வரும் நபர்கள் அனைவரும் கட்டாயமாக அரசு முகாமில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை மற்றும் டெல்லியில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால் இந்த இரு நகரங்களில் இருந்து கர்நாடகாவிற்கு வரும் அனைவரும் கட்டாயமாக அரசு முகாமில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கர்நாட அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 3 நாட்கள் அரசு முகாமிலும், அதன்பின் அவர்கள் வீட்டில் 11 நாட்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகா வரும் மக்கள் ஒரு வாரம் அரசு முகாமிலும், ஒரு வாரம் வீட்டிலும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது

வெளி மாநிலங்களில் இருந்து கர்நாடகா வருபவர்களால்தான் கொரோனா அதிகம் பரவுவதாக வந்த தகவலை அடுத்தே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

Continue Reading
To Top