மீண்டும் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கும் வரு சரத்

வரலட்சுமி சரத்குமார் சர்க்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இரண்டு படங்களிலும் வில்லத்தனம் செய்திருப்பார். இந்த படங்களில் இவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.

கடந்த சில மாதங்களாகவே வரலட்சுமி நடிக்கும் படங்கள் அதிகமாகி கொண்டே செல்கிறது. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான ரோலை ஏற்று நடித்துள்ளார் வரலட்சுமி.

தற்போது டேனி என்ற படத்தில் துப்பறியும் கதாபாத்திரத்தில் ஆக்சன் வேடத்தில் நடித்து வருகிறார் இவர். தஞ்சாவூரை கதைக்களமாக கொண்டு இப்படம் வளர்ந்து வருகிறது. அடுத்ததாகவும் ஆக்சன் படத்தில் நடிக்க இருக்கிறார் வரலட்சுமி.

வீரக்குமார் என்பவர் இயக்க தஷி என்பவர் இசையமைக்க கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் `சேஸிங்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தமிழ்ப் புத்தாண்டையொட்டு வெளியிடப்பட்டது. ஆக்‌‌ஷன் திரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது.