தமிழ் சினிமாவை கலக்கிய ஜேம்ஸ் பாண்ட் மியூசிக் உல்டா

ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் ஹீரோ அறிமுகம் ஆகும்போதும் முக்கிய காட்சிகளின்போதும் ஒரு எண்ட்ரி பிஜிஎம் இசைக்கப்படும்.

f54c5300075f7cd7d335bef9771e8739

ப்ளாக் அண்ட் ஒயிட் காலம் தொட்டு இன்று வரை வரும் பல சீசன் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இதுவே பிரதானம். இந்த இசையை கொஞ்சம் உல்டாவாக்கி தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் சிலர் சாதனை புரிந்திருக்கின்றனர்.

அவற்றில் முக்கியமானவர்கள் தமிழ்த்திரைப்பட பழம்பெரும் இசையமைப்பாளர் வேதா, எண்பதுகளில் கோலோச்சிய தேவா, தற்போதை அனிருத் இவர்கள் மூவரும் அதில் முக்கியமானவர்கள் ஆவர்.

இசையமைப்பாளர் வேதா தான் இசையமைத்த அதே கண்கள் படத்தில் இந்த ஜேம்ஸ்பாண்ட் மியூசிக்கை கொஞ்சம் உல்டாவாக்கி இருப்பார். இந்த அதே கண்கள் படம் அதிக சஸ்பென்ஸ் உள்ள படம். காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை ஏற்படுத்திய படம். கொலைகாரன் ஒருவன் வரும் காட்சிகளிலும் அவனை ஹீரோ ரவிச்சந்திரன் தேடும் காட்சிகளிலும் உபயோகம் செய்து பிரமாதப்படுத்தி இருப்பார்.

பின்பு அதே போன்று தேவாவின் இசையமைப்பில் கவிதாலயா தயாரிப்பில் வந்த அண்ணாமலை படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்று போடுவதற்காக ஒரு தீம் மியூசிக் உருவாக்கப்பட்டிருக்கும்.

படத்தின் டைட்டில் போடும்போதே ரசிகர்களை எழுந்து நின்று ஆட வைக்கும் இந்த டைட்டில் பிஜிஎம் சிவாஜிக்கு முன்பு வரை எல்லா படங்களிலும் பயன்படுத்தப்பட்டது.

திடீரென ஏ.ஆர் ரஹ்மானின் தீம் சிவாஜி படத்தில் மாற்றப்பட்டது. இது ரசிகர்களுக்கு மகிழ்வை தராத வேளையில் நீண்ட வருடத்துக்கு பிறகு அனிருத் இசையமைப்பில் இந்த ஜேம்ஸ்பாண்ட் மியூசிக் அதை விட கலக்கலாக போடப்பட்டுள்ளது. ரஜினியின் பேட்ட படத்திற்காக இது போடப்பட்டாலும் படத்தின் ஒரு காட்சியில் மட்டுமே இது வருகிறது. படத்தின் டைட்டிலில் தேவா இசையமைத்த பழைய இசையே மீண்டும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=o7HRN4MgmdA
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...