கன மழைக்கு இன்றும் வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புண்டு. சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருக்கிறது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் இருக்கும். 

கன மழைக்கு இன்றும் வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!



ஆங்காங்கே விட்டு விட்டு லேசானது முதல் பலத்த மழை வரை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூரில் கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 



இன்றைய நாளின் பெரும்பாலான நேரத்தில் சாரல் மழைக்கு வாய்ப்புண்டு. சென்னை மாநகரின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸில் இருந்து, 28 டிகிரியாக குறைந்துள்ளது. இன்று காலை 8.30 மணி உடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 9 மிமீ மழை பதிவாகியுள்ளது. 

நுங்கம்பாக்கத்தில் 7.8 மிமீ மழையும், மீனம்பாக்கத்தில் 3.5 மிமீ மழையும் பெய்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், கடலில் இருந்து காற்று உட்புறமாக வீசுவதாலும் பெய்கிறது. அடுத்த 3 நாட்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய இடங்களில் மேகக் கூட்டங்கள் காணப்படும்.